< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை சி.ஐ.எஸ்.எப். பயிற்சி மையத்தில் 6-வது துணை உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு விழா
|2 July 2023 4:06 AM IST
பயிற்சி நிறைவு விழாவில் தென்மண்டல சி.ஐ.எஸ்.எப். கூடுதல் இயக்குனர் ஜக்பீர் சிங் கலந்து கொண்டார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் 6-வது துணை உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்மண்டல சி.ஐ.எஸ்.எப். கூடுதல் இயக்குனர் ஜக்பீர் சிங் கலந்து கொண்டு பயிற்சி நிறைவு செய்த பெண்கள் உள்பட 308 வீரர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் பார்வையிட்டார். தொடர்ந்து வீரர்களின் வண்ணமிகு அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.