< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரம்ஜான் பண்டிகை: பாலிடெக்னிக் தேர்வுகள் தேதி மாற்றம்
|31 March 2024 6:48 AM IST
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 10 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
சென்னை,
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிடெக்னிக் தேர்வுகளுக்கான தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 10 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள், ஏப்ரல் 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.