< Back
மாநில செய்திகள்
ரம்ஜான் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
மாநில செய்திகள்

ரம்ஜான் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

தினத்தந்தி
|
10 April 2024 6:45 PM IST

ஈகை பெருநாளின் மகிழ்ச்சிகரமான தருணத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

ஈகைப் பெருநாளான ரம்ஜான் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று இரவு 8 மணியளவில் அறிவித்தார். இதற்கிடையே கோவை - சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி - வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களில் சிலர் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் நாளை ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஈகை பெருநாளின் மகிழ்ச்சிகரமான தருணத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். இந்த நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு மற்றும் சமுதாயத்தில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்