< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம்-திருப்பதி ரெயில்  5½ மணி நேரம் தாமதம்
மதுரை
மாநில செய்திகள்

ராமேசுவரம்-திருப்பதி ரெயில் 5½ மணி நேரம் தாமதம்

தினத்தந்தி
|
15 Oct 2022 2:10 AM IST

பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம்-திருப்பதி ரெயில் 5½ மணி நேரம் தாமதம் ஆனது.

ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக திருப்பதிக்கு வாரம் 3 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கிடையே, ராமேசுவரத்தில் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் மதுரையில் பராமரிப்பு பணிக்காக கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே, மதுரை ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் இடப்பற்றாக்குறை உள்ளது. இந்த நிலையில், ராமேசுவரம் ரெயில்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து, ராமேசுவரத்தில் இருந்து நேற்று மாலை 4.20 மணிக்கு திருப்பதி புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16780), பராமரிப்பு பணி தாமதம் காரணமாக நேற்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டது. அதாவது சுமார் 5½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் இந்த ரெயிலுக்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். குறிப்பாக திருப்பதி தரிசனத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்