< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராமேஸ்வரம்-கன்னியாகுமரி விரைவு ரெயில் இன்று தாமதமாக புறப்படும் - ரெயில்வே நிர்வாகம்
|28 Nov 2022 2:44 PM IST
ராமேஸ்வரம்-கன்னியாகுமரி விரைவு ரெயில் இன்று தாமதமாக புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம்,
ராமேசுவரம்-கன்னியாகுமரி விரைவு ரெயில் கடந்த ஜூன் 27-ந் தேதி முதல் வாரம் 3 முறை இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இதே வழியில் கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் சென்றடைகிறது.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் இரவு 11.30-க்கு புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக தாமதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.