< Back
மாநில செய்திகள்
ராமேஸ்வரம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு
சேலம்
மாநில செய்திகள்

ராமேஸ்வரம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

தினத்தந்தி
|
2 Oct 2022 1:30 AM IST

சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லும் ராமேஸ்வரம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சூரமங்கலம்:-

சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லும் ராமேஸ்வரம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரெயில்கள்

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்கள் மற்றும் ஏற்கனவே இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் கால அவகாசத்தை நீட்டித்து வருகிறது. அதன்படி சேலம் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம்-ஹூப்ளி, ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரெயில்கள் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரெயில் (07355) வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும். சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்படும் இந்த ரெயில் ஓசூர், தர்மபுரி வழியாக இரவு 7.50 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் நாமக்கல், கரூர், திருச்சி வழியாக மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

ராமேஸ்வரம்-ஹூப்ளி

ராமேஸ்வரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (07356) வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் திருச்சி, கரூர், நாமக்கல் வழியாக மறுநாள் காலை 5.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் தர்மபுரி, ஓசூர் வழியாக இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்