< Back
மாநில செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்..!
மாநில செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்..!

தினத்தந்தி
|
10 July 2023 10:47 AM IST

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம்,

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

மீனவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். கைதான 15 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 15 மீனவர்களை வருகிற 21-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி கஜநதி பாலன் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து 15 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள 15 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நள்ளிரவு முதல் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து விசைப்படகு மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்த போராட்டத்தால் 5,000-க்கும் அதிகமான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி முதல் 8 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டும் என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்