< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை - மீன்வளத்துறை இயக்குநர் உத்தரவு
|3 Sept 2023 10:23 PM IST
மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
தென் தமிழக கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மீன்வளத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள உத்தரவில், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதியில், திடீரென 200 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியது குறிப்பிடத்தக்கது.