< Back
மாநில செய்திகள்
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
மாநில செய்திகள்

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

தினத்தந்தி
|
9 July 2023 2:15 PM IST

இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம்,

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மீனவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள 15 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். அவர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்