< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 ேபர் சிறைபிடிப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 ேபர் சிறைபிடிப்பு

தினத்தந்தி
|
13 Sep 2023 6:45 PM GMT

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்தது.

ராமேசுவரம்,

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்தது.

19 மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.

இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் பெயர் மற்றும் கூடுதல் விவரங்கள் இலங்கை கடற்படை விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.

ரோந்து கப்பல்களால் சர்ச்சை

மீன்விலை குறைவு மற்றும் கடல் சீற்றம் காரணமாக 12 நாட்களாக ராமேசுவரம் பகுதியில் இருந்து பெரிய விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் முதல் அவர்கள் கடலுக்கு செல்லக்கூடும் என தெரியவந்ததால், கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டன. மீனவர்களை அச்சுறுத்துவதற்காக அவ்வாறு ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், மீன்பிடிக்க சென்ற முதல் நாளே 19 மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என மீனவர்கள் ேவதனை தெரிவித்தனர்

Related Tags :
மேலும் செய்திகள்