< Back
மாநில செய்திகள்
ரம்ஜான் சிறப்பு தொழுகை
தென்காசி
மாநில செய்திகள்

ரம்ஜான் சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
23 April 2023 12:47 AM IST

தென்காசியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

தென்காசி மஸ்ஜிதூர் ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பில், தென்காசி முஸ்தபியா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜமாத் தலைவர் மசூதுஅலி தலைமை தாங்கினார். இமாம் ஆசிக் பிர்தவுசி சிறப்புரையாற்றினார். இமாம் அயூப் அலி பைஜி தொழுகை நடத்தினார். செயலாளர் அமானுல்லா, பொருளாளர் ரெசவு முகம்மது, துணைத்தலைவர் மைதீன் சேட்கான், துணை செயலாளர்கள் நயினார் முகமது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ஏழைகளுக்கு அரிசி, உணவுப்பொருட்களை வழங்கினர்.

மேலும் செய்திகள்