< Back
மாநில செய்திகள்
ரம்ஜான் சிறப்பு தொழுகை
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ரம்ஜான் சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
22 April 2023 9:51 PM IST

வாணியம்பாடி, ஆலங்காயம், உதயேந்திரத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று வாணியம்பாடி செட்டியப்பன் பகுதியில் நடந்த சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் தொழில் அதிபர்கள் பட்டேல் முகமது யூசுப், அமானுல்லா, நிசார் அகமது, டாக்டர் அன்வருல்லா, வானிடெக் மேலாளர் அப்துல்லா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

நேதாஜிநகர் மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, இஸ்மாயில், அமீன், சதாம் உசேன், சாதிக்பாஷா உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஜாப்ராபாத்தில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஊராட்சி மன்ற தலைவர் அமீர்பாஷா, வார்டு உறுப்பினர் ஜபியுல்லா, முன்னாள் ஊராட்சி செயலாளர் ரபீக், ஷமீ, உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழுகையில் கலந்து கொண்டனர்.

உதயேந்திரம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ரேகான் அலி, தவ்சிப், அன்வர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆலங்காயம், சத்திரம், 102 ரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்