< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரமலான் நோன்பு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது- தலைமை காஜி அறிவிப்பு
|22 March 2023 9:17 PM IST
24-ந்தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
சென்னை,
இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பதாகும். ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், 24-ந்தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுத்தீன் முகமது ஆயுப் வெளியிட்ட அறிவிப்பில், " ரமலான் மாதப்பிறை இன்று தமிழ்நாட்டில் எங்கும் தென்படவில்லை. இதனால் ரமலான் நோன்பு வெள்ளிக்கிழமை தொடங்கும்" என்று கூறியுள்ளார்.