< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம்: தலைமை காஜி அறிவிப்பு
|11 March 2024 8:44 PM IST
பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில், நோன்புதொடங்குவதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார். இந்தநிலையில், ரமலான் நோன்பு மார்ச் 12-ம் தேதி (நாளை) முதல் தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சுஹுர் எனப்படும் விடியலுக்கு முந்தைய உணவை சாப்பிட்ட பிறகு சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். பிறை கணக்குப்படி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் வழக்கம்.