ராமநாதபுரம்
ரம்ஜான் நோன்பை முன்னிட்டுதிருக்குர்ஆன் ஓதும் போட்டி
|ரம்ஜான் நோன்பை முன்னிட்டு திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்றது
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் மாணவ-மாணவிகளுக்கான திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 29-ம் ஆண்டு போட்டி பனைக்குளம் நத்தர் ஒளியுல்லாஹ் தர்கா வளாகத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் பனைக்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்னுல் அஸ்ஸலாம் தலைமை தாங்கினார். முஸ்லிம் பரிபாலன சபை செயலாளர் முகமது ரோஸ் சுல்தான், முஸ்லிம் நிர்வாக சபை செயலாளர் சாகுல் ஹமீது, உதவிச்செயலாளர் முகைதீன் அலி, ஐக்கிய முஸ்லிம் சங்கம் தலைவர் காதர்முகைதீன், ஐக்கிய முஸ்லிம் சங்க செயலாளர் தாகிர் உசேன், கமிட்டி தலைவர் சாதிக் அலி, வாலிப முஸ்லிம் சங்க தலைவர் சீனி அன்வர், செயலாளர் சீனி ரியாஸ்கான் முன்னிலை வகித்தனர்.
பனைக்குளம் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம், சிறுவர்களுக்கான திருக்குர்ஆன் ஓதும் போட்டியை தொடங்கி வைத்து சிறப்பு துவா ஓதி திருக்குர்ஆனின் சிறப்புகள், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றி பேசினார். முடிவில் சாதிக் அலி நன்றி கூறினார்.