< Back
மாநில செய்திகள்
ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை - போலீஸ் அனுமதி தேவையில்லை: ஐகோர்ட்டு தீர்ப்பு
மாநில செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை - போலீஸ் அனுமதி தேவையில்லை: ஐகோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
22 Jan 2024 10:56 AM IST

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலை, பூஜை மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது.

சென்னை:

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பின் நீதிபதி கூறியதாவது:-

ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலை, பூஜை மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும். கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்