< Back
மாநில செய்திகள்
தர்மபுரியில் போலீசார் சார்பில்போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரியில் போலீசார் சார்பில்போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
12 Feb 2023 12:30 AM IST

நல்லம்பள்ளி:

அதியமான்கோட்டை போலீஸ் நிலையம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மாணவ, மாணவிகளின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் ஓட்டப்பட்டி வரை சென்று முடிவுற்றது. ஊர்வலத்தின்போது கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி மாணவர்கள் சென்றனர். மேலும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்றும், போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்