< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
கொல்லிமலையில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
|19 Nov 2022 12:15 AM IST
கொல்லிமலையில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
சேந்தமங்கலம்:
கொல்லிமலை பகுதியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல் மற்றும் அவர்களை பள்ளியில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வாழவந்தி நாடு அரசு பழங்குடியின நல உண்டு உறைவிட பள்ளி மற்றும் சேப்பாங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியோர் இணைந்து அந்த பள்ளிகளின் மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தலைமை ஆசிரியர்கள் சுமதி, சங்கர், இயன்முறை பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர் ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.