< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
வெண்ணந்தூரில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
|21 Aug 2022 7:40 PM IST
வெண்ணந்தூரில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
வெண்ணந்தூர்:
தமிழக அரசு சார்பில் நம்ம ஊரு சூப்பரு என்ற சுகாதார இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வெண்ணந்தூர் பகுதியில் அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை அரசு பள்ளிகள், அங்கன்வாடிகள், சந்தைகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்துதல், நீர்நிலைகள், சுகாதார வளாகங்கள் தூய்மைப்படுத்துதல் பணிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள 24 ஊராட்சிகளிலும் நேற்று முதல் தூய்மை பணி தொடங்கியது. மேலும் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. இதில் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மாதவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.