< Back
மாநில செய்திகள்
ராசிபுரத்தில்   தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
14 July 2022 9:30 PM IST

ராசிபுரத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்

ராசிபுரம்:

ராசிபுரத்தில் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், எரிபொருள் சிக்கனம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.

ஊர்வலம் பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவடைந்தது. இதை தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டன. இதில் பெட்ரோல் நிறுவனத்தின் தலைவர் குண்ணாஜி ராவ், விற்பனை அதிகாரி வெங்கடேஸ்வர ராவ், ராசிபுரம் சேதுராம், இந்தியன் வங்கி மேலாளர் அசோகன், தொழிலதிபர் சுப்பிரமணியம், பெட்ரோலிய நிறுவனத்தின் டீலர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ராசிபுரம் போலீசார் சார்பில் காவல் உதவி என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்