< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில்கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
21 Sept 2023 12:30 AM IST

நாமக்கல்லில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் தொடங்கி, மணிக்கூண்டு, பஸ் நிலையம் வழியாக சுமார் 2 கி.மீ தூரம் வரை சென்றது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கோவிந்தராசு, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) சவிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்