< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தினத்தந்தி
|
21 May 2022 10:42 PM IST

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி நினைவு நாள்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை முன்பு ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமை தாங்கி, ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை மாவட்ட தலைவர் கமலகண்ணன், மாவட்ட பொது செயலாளர் ஹரி, ஜெயசீலன், துணைத்தலைவர் மணி, கவுன்சிலர் விநாயகம், முன்னாள் நகர தலைவர் ரமேஷ் அர்னால்டு, வக்கீல் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பழைய பஸ் நிலையத்தில் நகர தலைவர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர தலைவர் தாஸ், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மாநில செலாளர் தேன்கு.அன்வர், மாவட்ட துணைத்தலைவர் சபியுல்லா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல்ஹ்மான் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் முகம்மது, வெங்கடேஷ், அசன்ராஜ், நஞ்சண்டன், ரங்கப்பா, அந்தோணி, முனிர்பாஷா, இதிரிஸ், முகம்மது, பர்கத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்