< Back
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தினத்தந்தி
|
23 May 2022 2:04 AM IST

காரைக்குடி, தேவகோட்டையில் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

காரைக்குடி,

ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாநில செயலாளர் சுந்தரம், ஜெயசிம்மா, முன்னாள் மாவட்டத் தலைவர் துரை சிங்கம், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள், வித்யா கணபதி இமயம் மடோனா, வேலம்மாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், காரைக்குடி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகுநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். காரைக்குடியில் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் சண்முகதாஸ், மனச்சை பழனியப்பன், மாவட்ட துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேவகோட்டையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..இதில் மாவட்ட துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை நகர தலைவர் (கிழக்கு) எஸ்.எம்.சஞ்சய், வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் மனோகரன், முத்துக்குமார் தேவகோட்டை நகர நிர்வாகிகள் வீரமணி, வேலு, மதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்