தூத்துக்குடி
ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
|தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ராஜீவ்காந்தி நினைவு தினம்
தூத்துக்குடியில் நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி பழைய பஸ் நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யூ.சி. மாநில அமைப்புச் செயலாளருமான பெருமாள்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ஆறுமுகநேரி- ஆத்தூர்
ஆறுமுகநேரி நகர காங்கிரஸ், திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ், சார்பில் மெயின் பஜாரில் உள்ள கே.டி.கோசல்ராம் நினைவாலயம் முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் மெயின் பஜாரில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ஆழ்வார்திருநகரி-திருச்செந்தூர்
ஆழ்வார்திருநகரியில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏரலில் காந்தி சிலை அருகில் அலங்கரிக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்செந்தூர் காமராஜர் சிலை அருகில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் வேல் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.