< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
|22 May 2023 1:22 AM IST
ஆழ்வார்குறிச்சியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கடையம்:
ஆழ்வார்குறிச்சியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் அழகுதுரை தலைமை தாங்கினார். வட்டார துணைத்தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முத்துக்குட்டி, பழக்கடை கண்ணன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.