< Back
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

தினத்தந்தி
|
22 May 2023 12:30 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ராஜீவ்காந்தி நினைவு தினம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதைமுன்னிட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளருமான கே.பெருமாள் சாமி தலைமை தாங்கி மாலை அணவித்து மரியாதை செலுத்தினார். மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் முத்துக்குட்டி முன்னிலை வகித்தார்.

இதில் வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிமுத்துவிஜய், தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆடிட்டர் திரு சிவராஜ் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்-உடன்குடி

ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் சாத்தான்குளம் வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், சாத்தான்குளம் வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், லூர்துமணி, காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர்கள் சுதாகர், குருசாமி, சாத்தான்குளம் நகர மகிளா காங்கிரஸ் தலைவர் புளோராஜோசப், சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி மெயின் பஜாரில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், நகர தலைவர் முத்து, திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் முத்துகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஏரல்-குலசேகரன்பட்டினம்

ஏரலில் நகர காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் பார்க்கர் அலி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குலசேகரன்பட்டினம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன்குடி வட்டார துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா, தூத்துக்குடி மாவட்ட இணைச் செயலாளர் நம்பி, மகளிர் அணி தலைவர் ஆமினா பீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆழ்வார்திருநகரி-கோவில்பட்டி

ஆழ்வார்திருநகரி குயில்நின்றார் தெருவில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு இடத்தில் ஆழ்வார்திருநகரி வட்டார, நகர நிர்வாகிகள் சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆழ்வார்திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், நகர பொறுப்பாளர் அபுதாஹீர், பால்குளம் கிராம தலைவர் விஜயகரன், மணல்குண்டு கிராம கமிட்டி தலைவர் வனச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நகர காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நகர தலைவர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார். மனித உரிமை துறை மாநில செயலாளர் காளிதாஸ், மாவட்ட செயலாளர்கள் துரைராஜ், ஜோஸ்வா, மாநில பொதுக்குழு உறுப்பினர் திருப்பதி ராஜா, ஐ.என்.டி.வி.சி. மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாவட்ட பொதுச் செயலாளர் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனைப்படி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து வட்டார தலைவர் நல்லகண்ணு தலைமையில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வெள்ளூர் அலங்காரபாண்டியன், சீனிராஜேந்திரன், மாவட்ட சேவாதள தலைவர் பிச்சைக்கண்ணு, மனித உரிமை துறை மாவட்டத் தலைவர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்