< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி நினைவு தினம்
|21 May 2022 11:46 PM IST
தென்காசியில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தென்காசி:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, தென்காசி காந்தி சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில், காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை, நகர தலைவர் காதர் முகைதீன், பொதுக்குழு உறுப்பினர் ஜி.மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.