< Back
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
தென்காசி
மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா

தினத்தந்தி
|
21 Aug 2022 11:56 PM IST

கடையம் வட்டாரத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கடையம்:

கடையம் வட்டார காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கடையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.கே. பாண்டியன் மோதிரம் அணிவித்தார். வட்டார தலைவர் அழகுதுரை தலைமை தாங்கினார். வட்டார தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட செயலாளர் முருகன், மூத்த நிர்வாகி சோமசுந்தரம், பொருளாளர் அடைச்சாணி முருகன், வட்டார மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி, ராமச்சந்திர பாண்டியன், கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். கடையம் யூனியன் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்