< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
|21 Aug 2023 3:13 AM IST
செங்கோட்டையில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி, செங்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் தாலுகா அலுவலகம் அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் ஜோதிலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நகர்மன்ற உறுப்பினர் முருகையா, நகர காங்கிரஸ் துணைத்தலைவர் கோதரிவாவா, நகர பொதுச்செயலாளர்கள் சுடலைமுத்து, இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இலக்கிய அணி தலைவர் ராஜீவ்காந்தி வரவேற்று பேசினார்.
நகர பொருளாளர் சங்கரலிங்கம், நகர தொழிற்சங்க தலைவர் செல்வகணபதி, நகர சிறுபான்மை பிரிவு தலைவர் முகம்மது சித்திக், வாவாகனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.