< Back
மாநில செய்திகள்
திருச்சியில் புதிய கொடியுடன் வந்த ரஜினி ரசிகர்கள்
மாநில செய்திகள்

திருச்சியில் புதிய கொடியுடன் வந்த ரஜினி ரசிகர்கள்

தினத்தந்தி
|
10 Feb 2024 3:29 AM IST

லால் சலாம் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

திருச்சி,

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லால் சலாம் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. திருச்சியில் 7 தியேட்டர்களில் நேற்று காலை இந்த படம் திரையிடப்பட்டது. இதனால் அவருடைய ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிலையில் திருச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர்கள் புதிதாக ஒரு கொடியுடன் வந்திருந்தனர். அதில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா உருவமும், "சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்" என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது. மேலும் அது சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களுடன் இருந்தது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒரு கொடியை பயன்படுத்தி வரும் நிலையில் புதிதாக ஒரு கொடியை ரசிகர்கள் எடுத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்