< Back
மாநில செய்திகள்
விசாலாட்சி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்
அரியலூர்
மாநில செய்திகள்

விசாலாட்சி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்

தினத்தந்தி
|
1 Oct 2022 12:15 AM IST

விசாலாட்சி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி 5-ம் நாளான நேற்று விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் விசாலாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மங்கல ஆரத்தி நடைபெற்ற பின்னர் விசாலாட்சி அம்மனுக்கு சகஸ்ர நாமாவளி அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் அபிராமி அந்தாதி அம்மன் துதி உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி ஆராதனை செய்தனர். ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன. ராஜராஜேஸ்வரி அஷ்டகம், வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்