< Back
மாநில செய்திகள்
ராஜபாளையம் சஞ்சீவி மலையில் திடீர் தீ
விருதுநகர்
மாநில செய்திகள்

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் திடீர் தீ

தினத்தந்தி
|
4 Aug 2023 12:21 AM IST

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் திடீரென தீப்பற்றியது

ராஜபாளையம், ஆக.4-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தின் கிழக்கு பகுதியில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகை நகர், மலையடிப்பட்டி, இ.எஸ்.ஐ. காலனி, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மலை உச்சியில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு தீ பரவியது. வனத்துறையினர் சிறு, சிறு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் காற்றின் வேகத்தில் தீ கொழுந்து விட்டு எரிவதால், தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இந்த காட்டுத்தீ, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்