< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
ராஜ வாய்க்கால் மீட்பு குழுவினர் நகராட்சி அலுவலகத்தில் மனு
|31 Dec 2022 12:15 AM IST
தேனி ராஜ வாய்க்கால் மீட்பு குழுவினர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் ராஜவாய்க்கால் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பொன் முருகன், துணை ஒருங்கிணைப்பாளர் சத்திய அருணகிரி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நேற்று தேனி நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் நகராட்சி அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அதில், கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த ராஜவாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். 2½ கிலோ மீட்டர் நீளமுள்ள வாய்க்காலில் ஒரு சில இடங்களில் தூா்வாரப்படாமல் உள்ளது. அதனை விரைவில் தூர்வார வேண்டும். வாய்க்காலின் கரைகளின் இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.