< Back
மாநில செய்திகள்
ராஜ்பவன் பாஜக அலுவலகமாக மாறியுள்ளது வெட்கக் கேடு: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கடும் தாக்கு
மாநில செய்திகள்

ராஜ்பவன் பாஜக அலுவலகமாக மாறியுள்ளது வெட்கக் கேடு: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கடும் தாக்கு

தினத்தந்தி
|
30 Oct 2023 5:04 PM IST

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கவர்னர் மாளிகை திட்டமிட்டு பொய்யைப் பரப்புகிறது என முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை,

முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தியை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:-

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. கவர்னர் மாளிகையின் எதிரே உள்ள சாலையில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கவர்னர் மாளிகை திட்டமிட்டு பொய்யைப் பரப்புகிறது. கவர்னர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறியிருப்பது வெட்கக்கேடானது. இன்னாருக்கு இதுதான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது திராவிடம். இதை கவர்னர் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்