< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சேலத்தில் கழிவுநீருடன் கலந்த மழைநீர் - கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தீவிரம்
|5 Sept 2022 10:34 PM IST
மூக்கனேரி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாய் நிரம்பி, கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் ஆறுபோல ஓடியது.
சேலம்,
சேலத்தில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது.
மூக்கனேரி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாய் நிரம்பி, கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் ஆறுபோல ஓடியது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.