< Back
மாநில செய்திகள்
மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
திருச்சி
மாநில செய்திகள்

மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
11 Oct 2023 1:53 AM IST

மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மத்திய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரண்யா, குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் எழிலரசன், நிர்வாக பொறியாளர்கள் நாகானந்த், வசந்தி, உமா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசார குறும்படத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்