< Back
மாநில செய்திகள்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்: கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்
ஈரோடு
மாநில செய்திகள்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்: கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
13 Oct 2023 7:34 AM IST

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஊர்வலத்தை, மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மழைநீர் சேகரிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் தியாகி குமரன் ரோடு வழியாக சென்று சம்பத் நகரில் நிறைவுபெற்றது.

மேலும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த குறும்படம் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டது. இதை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, பயிற்சி கலெக்டர் வினய்குமார் மீனா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் சிவகுமார், விநாயகம், உதவி நிர்வாக பொறியாளர் விஜய்குமார், துணை நிலநீர் வல்லுனர் துரைசாமி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்