< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
|10 Oct 2023 11:55 PM IST
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊா்வலம் இன்று நடைபெற்றது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து ஊர்வலத்தை கலெக்டர் மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சென்றனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலக சாலை, அரசு மகளிர் கல்லூரி வழியாக ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முடிவடைந்தது. முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டதை கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டார். இந்நிகழ்வில், நிர்வாகப் பொறியாளர் அய்யாசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.