< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தாம்பரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் - தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு
|4 Dec 2022 3:46 PM IST
மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ள இடங்களை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு,
தாம்பரம் மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க 29 இடங்களில் சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் 89 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ள இடங்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அவர்களிடம் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.