திருநெல்வேலி
மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி
|நெல்லை தச்சநல்லூரில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை துணை மேயர் கே.ஆர்.ராஜூ தொடங்கி வைத்தார்.
நெல்லை மாநகரில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி தச்சநல்லூர் 1-வது வார்டு சிதம்பரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமை தாங்கி, வடிகால்களை தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார். தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு முன்னிலை வகித்தார். மண்டல உதவி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் லெனின், உதவி பொறியாளர் ஜெயகணபதி, சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் வடிகால்களை தூர்வாரினர். இதேபோன்று மாநகரில் அனைத்து பகுதிகளிலும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால்கள் தூர்வாரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.