< Back
மாநில செய்திகள்
மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி
திருவாரூர்
மாநில செய்திகள்

மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி

தினத்தந்தி
|
18 Sept 2023 12:30 AM IST

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி நடந்தது.

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி நடந்தது.

தார்ச்சாலை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த பகுதி வழியாக தினமும் பல்வேறு ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் சுற்றுலா வாகனங்களே பெரும்பாலும் இயக்கப்படுகின்றன.

நெடுஞ்சாலை பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் மூடப்படும்போதெல்லாம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. திருவாரூர், நாகை, நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழித்தடம் என்பதால் போக்குவரத்து சீராக நடைபெறுவது அவசியமாக உள்ளது. ஆனால் ரெயில்வே கேட் மூடப்படுவது மற்றும் முறையான சாலை வசதி இல்லாததால் வெளியூர் பயணிகள் தினசரி அவதிப்பட்டு வருகிறார்கள்.

போக்குவரத்து மிகுந்த பகுதியாக நீடாமங்கலம் உள்ள நிலையில் நீடாமங்கலம் நகரில் அண்ணா சாலையில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு அடுக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. மேலும் இன்னும் 2 அடுக்கு தார்ச்சாலை பணி நடை பெறும் என கூறப்படுகிறது.

சீரமைப்பு பணி

இந்தநிலையில் சாலையின் இரு புறங்களிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே கழிவு நீர் வடிகாலில் வருவதால் பணி மந்தமாக நடந்து வருகிறது.

கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் என வடிகாலில் வீசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரியார் சிலை அருகில் சாலையையொட்டி வரும் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பால் வடிகாலில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. பேரூராட்சி பணியாளர்கள் பொக்லின் எந்திரம் மூலம் வடிகால் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்