பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட மழை அளவு விவரம்
|பெரம்பலூர் மாவட்ட மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. நேற்று காலை முதலே வெப்பத்தின் கடுமை குறைந்து இதமான தட்பவெப்பநிலை நிலவியது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இடி, மின்னலுடன் சிறிது நேரம் பலத்த மழை கொட்டியது. இதில் பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளிலும், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம், வேப்பந்தட்டை தாலுகா தழுதாழை, அரும்பாவூர், குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாடு, காடூர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் சிறிது நேரம் பரவலான மழை பெய்தது.
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- பெரம்பலூர்-32, செட்டிகுளம்-54, பாடாலூர்-9, அகரம்சிகூர்-5, புதுவேட்டக்குடி-12, வேப்பந்தட்டை-5, தழுதாழை-20, எறையூர், கிருஷ்ணாபுரம், வி.களத்தூர் பகுதிகளில் தலா 3 மி.மீ. மொத்த மழையளவு-167 மி.மீ., சராசரி மழையளவு-15.18 மி.மீ. ஆகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடு, இடி, மின்னல் காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. பெரம்பலூர் நகரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது. பின்னர் இரவு 11 மணியளவில் மின்சாரம் மீண்டும் வினியோகம் செய்யப்பட்டது. இதேபோல் பெரம்பலூரில் சில பகுதிகளில் நேற்று காலை 6.30 மணி முதல் மின்சாரம் சிறிது நேரம் தடைபட்டது. மின்வாரிய அதிகாரிகளின் தீவிர முயற்சியால் மின் வினியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.