< Back
மாநில செய்திகள்
காற்றுடன் மழை
மாநில செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மழை

தினத்தந்தி
|
3 July 2024 9:23 PM IST

சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சென்னை,

சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி, மீஞ்சூர், திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

விமான நிலையம் பகுதியை அடுத்துள்ள குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல்,அம்பத்தூர், பாடி கொரட்டூர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. காட்டுப்பாக்கம், மாங்காடு, குமணன்சாவடி, உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்கிறது.

கனமழை காரணமாக அம்பத்தூர் பகுதியில் சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டார இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்