< Back
மாநில செய்திகள்
இடி, மின்னலுடன் மழை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

இடி, மின்னலுடன் மழை

தினத்தந்தி
|
30 April 2023 12:15 AM IST

சின்னசேலம், சங்கராபுரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. மரக்கிளை முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சின்னசேலம்:

சின்னசேலம், சங்கராபுரம் பகுதியில் நேற்று மாலை திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாததால் தொட்டியம் பஸ் நிறுத்தம் அருகில் இருந்த இச்சிலி மரத்தின் கிளை முறிந்து கனியாமூர்- கச்சிராயபாளையம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் சாலையோரத்தில் நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள் சேதமானது. மேலும் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த மரக்கிளையை பொதுமக்கள் வெட்டி அகற்றினர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்