< Back
தமிழக செய்திகள்

தஞ்சாவூர்
தமிழக செய்திகள்
இடி,மின்னலுடன் மழை

24 April 2023 2:16 AM IST
வல்லத்தில் இடி,மின்னலுடன் மழை பெய்தது.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள வல்லத்தில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது.இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் வல்லம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.