< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் மழை நீர் ஓடவில்லை...அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றனர் - ஆர்.பி. உதயகுமார் பேட்டி
|2 Nov 2022 12:32 PM IST
பருவ மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது .உண்மையான கள நிலவரத்தை முதல் அமைச்சர் வெளியிட வேண்டும்.
சென்னை,
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மழை நீர் வடிகால் திட்டம் குறித்து கூறியதாவது ;
சென்னை மழைநீர் வடிகால் திட்டம் அரைகுறையான திட்டமாக இருக்கின்றது;பருவ மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது .உண்மையான கள நிலவரத்தை முதல் அமைச்சர் வெளியிட வேண்டும்.
ஒரு சில இடங்களில் அவசர கதியில் மழைநீர் வடிகால் பணிகளை முடித்துள்ளார்கள்.சென்னையில் வடிகால் பணிகள் எந்த அளவிற்கு முடிந்துள்ளது என கேட்டால் 90% முடிந்துள்ளதாக கூறுகிறார்கள்.ஆனால் 40% தான் முடிந்துள்ளதாக தெரிகிறது"
சென்னையில் பெய்த சிறிய மழைக்கே அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், வேலை ஓடுவதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.