< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மழை நீர் வடிகால் பணிகள் - தலைமைச்செயலாளர் 2-வது நாளாக ஆய்வு
|30 Oct 2022 9:40 AM IST
சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை,
சென்னையில் மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க உள்ளது. எனவே பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியின் பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் கேட்டறிந்தார்.
இந்தநிலையில் 2-வது நாளாக சென்னை பள்ளிக்கரணை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். ஆய்வில் மாநகராட்சி அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். சென்னையில் 8 இடங்களில் தலைமைச்செயலாளர் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.