< Back
மாநில செய்திகள்
மழைக்கால விடுமுறை; சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்யலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
மாநில செய்திகள்

மழைக்கால விடுமுறை; சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்யலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தினத்தந்தி
|
5 Nov 2022 7:48 PM IST

சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்து கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடலாம் என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அதே போல் விடுமுறை விடப்பட்ட நாட்களுக்கு ஈடு செய்யும் விதமாக தேவைப்படும் இடங்களில் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவது குறித்தும் கலெக்டர்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்