< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 26-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
|21 Dec 2023 5:56 AM IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 26-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 26-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 26-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி (நேற்று) வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 45 செ.மீட்டர் பெய்துள்ளது. இது, இயல்பைவிட 6 சதவீதம் அதிகம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.