< Back
மாநில செய்திகள்
தென்காசி, செங்கோட்டையில் மழை
தென்காசி
மாநில செய்திகள்

தென்காசி, செங்கோட்டையில் மழை

தினத்தந்தி
|
4 Sept 2023 12:15 AM IST

தென்காசி, செங்கோட்டையில் நேற்று மிதமான மழை பெய்தது.

தென்காசியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்தது. நேற்று காலையில் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இந்த மழை மாலையிலும் நீடித்தது. தென்காசி குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

இதேபோல் செங்கோட்டையிலும் நேற்று மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை மிதமான மழை பெய்தது.

Related Tags :
மேலும் செய்திகள்